வவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

முல்லை இளைஞர்களின் புதிய படைப்பு காலப்பயணமும் கால எச்சங்களும்

வவுனியா மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் அவர்களின் ஏற்பாட்டில்  இன்றையதினம் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் பற்றிய கருத்தாடல்கள் நிகழ்த்தப்பட்டன

அதனைத் தொடர்ந்து வெளி இதழாசிரியர் ந.அருளானந் அவர்களினால் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அஸ்திரம் மக்கள் நற்பனி மன்ற செயலாளர் நா.கிருஷ்ணமூர்த்தி , ஈரநிலம் அமைப்பின் தலைவர் சுதன் , பாடசாலை ஆசிரியர்கள் , நொச்சி அரும்புகள் சிறுவர் கழக உறுப்பினர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like