வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் உற்சவத்தின் ஆரம்பம்!

வரலாற்றுசிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனி திங்கள் முதலாவது திங்கள் உறசவம் இன்று வெகு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாகக் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இலங்கையின் அருள்மிகுந்த  கண்ணகை அம்மன் ஆலயமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் பங்குனி திங்கள் உற்சவம் மிகவும் சிறப்பாக அனுஸ்டிக்கப்படுவது வழமையாகும்.

இந்த நிலையில் முதலாவது திங்கள் ஆன இன்று (20,03)பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் ஆலயத்துக்கு வருகைதந்து பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்ததோடு தமது நேர்த்திக்கடன்களையும்  சுட்டெரிக்கும்  வெயிலுக்கு மத்தியிலும்  செலுத்தியிருந்தனர்.

You might also like