ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய இராணுவ வீரர் ஒருவர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேகொவ்வ மனுவன்கொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like