சற்றுமுன் கிளிநொச்சிப் போராட்டத்தில் பதற்றம் (காணொளி)

கடந்த 20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முப்பதாவது  நாளாக  தீர்வின்றி தொடர்கிற நிலையில்

போராட்டத்தில்  போராட்டத்தில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த தாயொருவர்  மயக்கமடைந்து வீழ்ந்தமையால் அங்கு பதற்ற நிலை  நிலவியது பின்னர்  வடமாகாண  நோயாளர்   காவுவண்டி நிலையத்திற்கு  தகவல்  வழங்கப்பட்டதனை  அடுத்து  சில நிமிடங்களில்  கிளிநொச்சி பொதுவைத்தியசாலை  நோயாளர் காவுவண்டி  மூலம்  குறித்த தாயார்  வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டுள்ளார்

குறித்த தாயார்  காணாமல்  ஆக்கப்பட்ட  தனது  பிள்ளையின்  நினைவுகள்  வரும்போதெல்லாம் இவ்வாறு மயக்கமடைபவர்  என்பதுடன்  இதற்காக  பிரத்தியேக  வைத்தியர் மூலம்  சிகிச்சை பெற்றுவருகின்றார்  என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/PAAo_QklxTQ

You might also like