வவுனியாவில் பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட திருக்கோவிலில் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.

தமது உறவுகளை நினைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மேலும் இங்கு அனைவரும் தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி கதறி அழுவதையும் காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like