வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் : ஆசிரியர் காயம்

வவுனியா செட்டிக்குளம் இலுப்பக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையோன்றில் இன்று (21.03.2017) காலை 8.30மணியளில் பெற்றோர் ஒருவரால் ஆசிரியரோருவர் தாக்கப்பட்ட சம்பவமோன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 13.03.2017 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் விளையாட்டுப்போட்டியோன்று இடம்பெற்றது. இவ் விளையாட்டு போட்டியில்  மாணவியோருவர் ஒர் இளைஞனுடன் தனிமையில் கதைத்து கொண்டுள்ளார். இதனை கண்னுற்ற ஆசிரியர் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன் பின்னர் குறித்த மாணவியின் செயற்பாடுகளின் அதீர்ப்தியடைந்த ஆசிரியர் மீண்டும் பெற்றோரை அழைத்து குறித்த மாணவியின் செயற்பாடுகளை தெரிவித்துள்ளார். சரி என தெரிவித்து விட்டு சென்ற பெற்றோர் இன்று (21.03.2017) காலை 8.30மணியளவில் அதிபரை சந்தித்துள்ளார். இதன் போது அதிபருக்கு அருகே நின்ற குறித்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

You might also like