வவுனியாவில் வரலாறு காணாத மாற்றம்! மாவீரர்களுக்காய் புலனாய்வாளரின் தீப அஞ்சலி;நெகிழ்ச்சியில் தமிழர்கள்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகுதிரி கொழுத்தி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்படமெடுத்துக்கொண்டிருந்த புலனாய்வாளர் மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மக்களின் கண்ணீருடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தலை கண்டு உணர்வுபூர்வமாக தனது அஞ்சலியினை செலுத்தியமை அவதானிக்க முடிந்தது.

You might also like