7 வயது மகளை வெறித்தனமாக கொலை செய்த தந்தை: தப்பித்து ஓடிய மகன்
தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை நீரில் முழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அருணா என்பவரை திருமணம் செய்து வாழந்து வந்துள்ளார். இவர்களுக்கு அசோக் ராஜா(9) என்ற மகன் மற்றும் ஹரிஷ்மா(7) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் அருணா மற்றும் முனியசாமிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று தகராறு முற்றியுள்ளது, இதனால் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தால், அவர் தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார்.
இன்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அருகே உள்ள கண்மாயிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரையும் வெறித்தனமாக அடித்து நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.
மகன் அசோக்ராஜா தந்தையின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். ஹரிஸ்மாவை அடித்து, கண்மாயில் தேங்கிக் கிடந்த நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார் முனியசாமி.
சிறுவன் அசோக்ராஜா கூறிய தகவலின் பேரில், கண்மாயில் கிடந்த ஹரிஸ்மாவின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.
அசோக்ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையாளி முனியசாமியை பொலிசார் தேடி வருகின்றனர்.