வவுனியா உமா மகேஸ்வரன் முன்பள்ளிக்கு  உபகரணங்களும் சீருடையும் வழங்கி வைப்பு

வவுனியா திருநாவற்குளம் உமா மகேஸ்வரன்  முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு இன்றையதினம் (28.11) காலை 8.30 மணிக்கு அதிபர் மீரா குணசீலன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய கண்காட்சி நிகழ்வில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 75, 000 பெறுமதியான  பான்ட் வாத்திய உபகரணங்களும், சீருடையும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இன்றைய நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், வவுனியா நகர சபையின் உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சந்திரேஸ்வரன், உறுப்பினர் ரவிச்சந்திரன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், ஆற்றல் அரசி பனம் பொருள் உற்பத்தி நிலைய செயலாளர் நிலா, முன்பள்ளி ஆசிரியர், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.

You might also like