வீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

மாலையில் நாம் செய்யும் சில செயல்கள் தான் நம் வீட்டில் பணம் தங்காமல் போவதற்கு முக்கிய காரணமாம். எனவே அவை என்ன என தெரிந்து கொண்டு இனிமேல் அதை பின்பற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.

துளசியைத் தொழுவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசியை தொழுவது அல்லது தொடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் அந்த வீட்டில் துரதிர்ஷ்டம் வருவதோடு, வறுமை நீங்காமல் இருக்கும்.

அதுவே துளசியை அதிகாலையில் நீர் ஊற்றி, நெய் விளக்கேற்றி தொழுது வந்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி, லட்சுமி தேவி குளிர்ச்சியடைந்து, செல்வத்தை ஈர்க்கச் செய்வாள்.

வீட்டைப் பெருக்குவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின், வீட்டைப் பெருக்குவது என்பது கெட்ட சகுணமாக கருதப்படுகிறது. சாஸ்திரத்தின் படி, இப்படி வீட்டைப் பெருக்கினால் வீட்டில் உள்ள அனைத்து சந்தோஷம் மற்றும் அதிர்ஷ்டத்தை வெளியேற்றுவதற்கு சமமாகும்.

இல்லறம்

மாலை வேளையில் இல்லறத்தில் ஈடுபடுவது நல்லதல்ல என சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில், இந்த நேரத்தில் இல்லறத்தில் ஈடுபட்டால், அது துரதிர்ஷ்டத்தை ஈர்க்குமாம்.

தூங்குவது

சூரிய அஸ்தமனத்திற்கு பின் தூங்கினால் துரதிர்ஷ்டம் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் ஈர்க்கப்படும். அதுமட்டுமின்றி இந்நேரத்தில் தூங்கினால், உடல் பருமன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளால் அவஸ்தைப்படக்கூடும்.

பாத்திரங்களை கழுவுவது

உணவு உட்கொண்ட பின்னர், பாத்திரங்களை அப்போதே சுத்தம் செய்யாவிட்டால், அதனால் சனி மற்றும் சந்திரனின் கெட்ட செல்வாக்கை பெற நேரிடும். உணவு உண்ட உடனேயே பாத்திரத்தை சுத்தம் செய்தால் லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பை அளிப்பார்.

படிப்பது

மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போது படிப்பது, லட்சுமி தேவியின் கோபத்தை தான் ஈர்க்கும். ஆகவே மாலையில் ஒரே இடத்தில் அமர்த்து படிப்பதை விட்டு, விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

அசுத்தமான சுற்றுச்சூழல்

வீடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பகுதியை அசுத்தமாக வைத்துக் கொண்டால் அது லட்சுமி தேவியை கோபப்படுத்துவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

You might also like