சிங்களவர்களின் எண்ணிக்கை குறைகிறது! பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள் – முதலமைச்சர்

இலங்கை மக்கள் “சிறிய குடும்பம் பொன்னாது“ என்ற மனநிலையில் இருந்து மீள வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 70 ஆம் ஆண்டுகளில் போல் அதிகளவில் பிள்ளைகளை பெறவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அண்மையில் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே மேல் மாகாண முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில தசாப்தங்களுக்கு முன்னர் சிறிய குடும்பம் பொன்னாது என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதன் பிரதிபலனை நாம் உணர்ந்துள்ளோம்.

கொழும்பு சனத் தொகையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தமிழர்கள் இரண்டாவது இடத்திலும் சிங்களவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இன்னும் சில வருடங்களில் இலங்கையில் சிறுபான்மை தலைவர் ஒருவர் உருவாகுவார் என்பதை நான் கேட்க முடியும்.

அடுத்த 10 வருடங்களில் இந்த நிலைமை ஏற்படும் எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

You might also like