பிரபல நடிகையைப் போன்று பின்னழகை மாற்ற நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! பரிதாப சம்பவம்

வென்சுலியாவில் இளம் நடனப் பெண் ஒருவர் பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கார்தசன் போன்று பின்னழகை மாற்ற நினைத்ததால், தற்போது அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

வென்சுலியா நாட்டைச் சேர்ந்தவர் Fanny Kaina Solis Peraza. 26 வயதான இவர் நடனப் பெண் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் தன்னுடைய பின்னழை பெரிதாக்க வேண்டும், அதாவது பாலிவுட் நடிகை கிம் கார்தசன் போன்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

இதற்காக அவர் அங்கிருக்கும் El Virrey cosmetic சலூன் கடைக்கு சென்றுள்ளார். அந்த சலூன் கடையில் இருந்த திருநங்கை Fanny Kaina Solis Peraza-வின் பின் பகுதியில் ஊசியை வைத்து சிலிகான் வகை திரவத்தை செலுத்தியுள்ளார்.

இதனால் பின்புறம் பெரிதாகவும் ஆகியுள்ளது. ஆனால் அதை செய்த இரண்டு மணி நேரங்களில், Fanny Kaina Solis Peraza-வுக்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் குறித்த சலூன் கடைக்கு சென்ற போது, அந்த திருநங்கை இல்லை.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் அவரின் உண்மையான Nixon Moises Angulo Chavez(39) என கண்டறிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இருக்கும் பெண் தங்களுடைய மார்பகம் மற்றும் பின்னழகு போன்றவைகளை பெரிதாக்குவதற்கு பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனால் அதில் சில முடிவுகள் இது போன்ற துயர முடிவை கொடுத்துவிடுகிறது.

You might also like