வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இப்படியோரு துவிச்சக்கரவண்டி தரிப்பிடமா?

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டித் தரிப்பிடமானது பாடசாலையின் அதிபர் தா.அமிர்தலிங்கம் முன்னிலையில் கல்லூரியின் முன்னாள் அதிபர் தர்மாம்பிகை சிவஞானம் அவர்களினால் கடந்த (23.11.2018) காலை 9.00மணியளவில் திரைநீக்கம் செய்யப்பட்டு மாணவ மாணவிகளின் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2016 மற்றும் 2017ம் ஆண்டு பாடசாலை பழைய மாணவ சங்கத்தின் வேண்டுகோளிக்கினங்க வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினரின் நிதியோதுக்கிட்டில் 400க்கு மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகளை எவ்வித இடையூறுமின்றி தரித்து நிறுத்தக்கூடிய வகையில் சுமார் 38 லட்சம் பெறுமதியாக இவ் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்தவோரு பாடசாலையிலும் இல்லாத அமைப்பில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இவ் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

 

You might also like