கிளிநொச்சியில் இளநீர்,தேங்காய் விலை அதிகரிப்பு!
கிளிநொச்சியில் தேங்காய் மற்றும் இளநீர் என்பவற்றின் விலைஅதிகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் ஒன்று 45 ரூபாய் தொடக்கம் 60 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இளநீர் 60 ரூபாய் தொடக்கம் 75 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நிலவும் அதி உச்ச வெயில் காரணமாக கிளிநொச்சியில் இளநீர் விற்பனை வெகுவாக அதிகரித்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.