வவுனியா வருகைதரவுள்ள விக்கினேஸ்வரனுக்கு தாண்டிக்குளத்தில் காத்திருந்த அதிர்ச்சி

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுகின்றன

சுயபுத்தியின்றி சொல்புத்தி கேட்டு 4/5 பெருபான்மையுடன் அமைத்த மாகாணசபையை நாசமாக்கிய 23ம் புலிகேசியே வருக வருக

தமிழர் தேசத்தில் அமையவிருந்த பொருளாதார மத்திய நிலையத்தினை சிங்கள தேசத்தில் அமைக்க காணிவழங்கிய வள்ளலே வருக வருக

பழைய பேரூந்து நிலையத்தினை மூடி அப்பாவி மக்களினதும் நகர வர்த்தகர்களினதும் மடியில் கைவைத்த பெருந்தகையே வருக வருக..

போன்ற பல்வேறு வசனங்களுடன் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என துண்டுப்பிரசுரத்தின் கீழே காணப்படுகின்றது.

You might also like