வவுனியாவில் நான்கு ஊடகவியலாளர்களுக்கு ஏழு நீ விருது வழங்கி கௌரவிப்பு

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று (02.12.2018) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வவுனியா நகரசபையின் ஏழு நீ பண்பாட்டு முற்றம் நடாத்திய ஏழு விருது வழங்கல் நிகழ்வில் நான்கு ஊடகவியலாளர்களுக்கு  ஏழு நீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஊடகத்துறையில் நான்கு ஊடகவியலாளர்களும் இணையத்தளச் செய்தியாளர் இருவரும் இவ் ஏழு நீ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

ஊடகத்துறையில் மயில்வாகனம் சிவபாதசுந்தரம் , மைக்கல் குணரட்ணம் ரெட்ணகாந்தன் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டதுடன் நவரத்தினம் கபில்நாத், கிருஸ்ணபிள்ளை வசந்தரூபன் ஆகியோர் நிகழ்வுக்கு சழூகமளிக்கவில்லை மற்றும் இணையத்தள செய்தியாளராக பரமேஸ்வரன் கார்த்தீபன் , நடராஜா ஜனகதீபன் ஆகிய இருவரும் விருதினை பெற்றுக்கொண்டனர்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகத்துறையில்

மயில்வாகனம் சிவபாதசுந்தரம்

இவர் ஊடகத்துறையில் 28 வருடங்களாகப் பயணிக்கும் இவர் வீரகேசரி பத்திரிகையின் வவுனியா மாவட்டச் செய்தியாளராகவும் கடமையாற்றுகின்றார். இவர் தேசபந்து , லங்காபுத்ர , விஸ்வகீர்த்தி விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைக்கல் குணரட்ணம் ரெட்ணகாந்தன்

சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றும் இவர் டான் தொலைக்காட்சியின் செய்தியாளராகவும் உள்ளார். ரத்ன தீப தேச அபிமான, வவுனியம் முதிர் கலை இளவல் போன்ற விருதிகளையும் பெற்றுள்ளார்.

நவரத்தினம் கபில்நாத்

வீரகேசரி , தினக்குரல் , தமிழ்மிரர் பத்திரிகைகள், சக்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் செய்தியாளராக பணியாற்றுகின்றார். இவர் இரத்தினதீபம் , இளங்கலைஞர் விருதுகளையும் பெற்றவர்.

கிருஸ்ணபிள்ளை வசந்தரூபன்

வலம்புரி பத்திரிகையின் வவுனியா மாவட்ட நிருபரான இவர் தமிழின் அழிவு நிலையில் உள்ள கலைகள் பற்றிய தகவல்களை அறிந்து ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருவதோடு பட்டிமன்ற பேச்சாளராவும் உள்ளார். இவர் சமாதான அறிக்கையிடல் விருது , இரத்தினை தீபம் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

இணையத்தளச் செய்தியாளர்

பரமேஸ்வரன் கார்த்தீபன்

தனியார் இணையத்தளத்தின் உரிமையாளரான இவர் சமகாலத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் , சம்பவங்களையும் தொகுத்து இணைய ஊடகங்களில் மக்களுக்கு பகிர்ந்து வருகின்றார்.

நடராஜா ஜனகதீபன்

தனியார் இணையத்தளமோன்றின் உரிமையாளரான இவர் அரசியல், பொருளாதாரம் , நாட்டுநடப்பு போன்றவாறான செய்திகளை தனது இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.

You might also like