யுத்தத்தில் கால்களை இழந்த கிளிநொச்சி சிறுவர்களின் மனதை உருக்கும் கோரிக்கை

யுத்தத்தில் கால்களை இழந்த கிளிநொச்சி சிறுவர்களின் மனதை உருக்கும் கோரிக்கை

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் பல்வேறு தேவைப்பாடுகளுடன் காணப்படுவதுடன், அவர்களுக்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த சமயம் குறித்த சிறுவர்கள் எறிகணை வீச்சில் தமது கால்களை இழந்தனர்.

இந்த நிலையில், வட்டக்கச்சி இராமநாதபும் பகுதியில் தமது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்ற போதும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

அவற்றை தீர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில் அன்றாடம் கூலி வேலைகளை நம்பி வாழும் குடும்பங்களாகவே காணப்படுகின்றன.

குறைந்தது இவ்விரண்டு சிறுவர்களினதும் பாடசாலைக்கான போக்குவரத்து வசதிகளையாவது ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like