முல்லைத்தீவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு! விவசாயிகள் விசனம்

முல்லைத்தீவில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு! விவசாயிகள் விசனம்

முல்லைத்தீவு – தென்னியங்குளம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையினால் நெற்பயிர்கள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்கு நேற்றிரவு காட்டு யானைகள் உட்புகுந்து பெருமளவான பயிர்களையும் மரங்களையும் அழித்து நாசம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அவர்கள் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர் எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அதிகளவான காட்டு யானை தொல்லைகளின் காரணத்தினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like