யாசகம் எடுக்கச்சென்ற முதியவர் பரிதாபமாக பலி : உடலை ஏற்க யாரும் இல்லை..

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் யாசகம் எடுக்கச்சென்ற முதியவர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது உடலை வாங்குவதற்கு இதுவரை யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று – கல்முனை வீதியை கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த வயோதிபரின் உடலை யாரும் உரிமை கோரவில்லை என்பதால் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வயோதிபர் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு வயோதிபரை அடையாளம் தெரிந்தவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின், 067 22 77 213 என்ற இலக்கத்துக்கோ அல்லது 075 708 1317 (அப்துல் வஹாப் ) எனும் இலக்கத்துக்கோ அழைத்து தெரியப்படுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like