கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை

கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 65, 000 ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – முரசுமோட்டை, முருகானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள விவசாய மருந்துகள் மற்றும் உரம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 65, 000 ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பலவும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like