மாணவர்கள் கையில் கற்பூரம் கொளுத்திய ஆசிரியைக்கு தண்டனை

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு, இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

மாணவி ஒருவரின் பணத்தைத் திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர், மாணவர்கள் அறுவரின் கைகளில் கற்பூரத்தைக் கொழுத்தியுள்ளார்.

இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது கையில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் கையில் கற்பூரம் கொளுத்திய ஆசிரியரை இடமாற்றக் கோரி, பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட மக்கள், நேற்று முன்தினம் காலை ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் மற்றும் ஹட்டன் வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகள், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னரே, மேற்படி ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி..

மாணவனின் கையில் கற்பூரம் ஏற்றிய ஆசிரியை

You might also like