வவுனியாவில் கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த மூவர் கைது !

வவுனியாவில் கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த மூவர் கைது !

வவுனியாவில் கேரள கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வைத்து வழிமறித்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like