முல்லைத்தீவில் யாழ் நோக்கி வந்த தொடருந்து யானையைப் பலியெடுத்தது!

முல்லைத்தீவில் யாழ் நோக்கி வந்த தொடருந்து யானையைப் பலியெடுத்தது!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்தில் யானை ஒன்று மோதுண்டு உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இது தெடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை இரவு நேர தபால் தொடருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் குறித்த பிரதேச மக்கள் குடியிருப்புக்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவடுவதாக மக்களால் முறையிடப்பட்டும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகள் விரைந்து செயற்படிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திராது என கூறும் மக்கள் தமது உயிருக்கும் பாதுகாப்பில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

You might also like