ஹோட்டலில் பணம் திருடிய நபர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரசேத்தில் ஹோட்டல் ஒன்றில் பணம் திருடிய நபரை காத்தான்குடி பொலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

பாலமுனை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கட்கிழமை இரவு கொத்து ரொட்டி வாங்குவதற்காக சென்ற நபர் ஒருவர் அந்த ஹோட்டலில் இருந்த 13000 ரூபா பணத்தினை திருடிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் ஹோட்டல் உரிமையாளரான ஏ.ஜி.எம்.அன்வர் காத்தான்குடி பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

You might also like