கணவனை கொன்று பெட்டியில் எடுத்து சென்ற மனைவி: பீதியை கிளப்பும் வீடியோ

இந்தியாவில் பெண் ஒருவர் கணவரை கொன்று உடலை அகற்ற பெட்டியில் அடைத்து எடுத்த வந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொஹாலியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. மனித உரிமை ஆர்வலர ஜஸ்பால் சிங் தில்லானின் மகனான இகம் தில்லானே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இகம் தில்லானின் மனைவி சீரத் தில்லான் உரிமம் பெற்ற தனது துப்பாக்கியால் கணவரை சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர், மறுநாள் காலை உடலை அகற்ற பெரிய பெட்டியில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் பெட்டியை கண்ட சந்தேகமடைய சீரத் சிக்கியுள்ளார். இதனையடுத்து, பெட்டியை திறந்து பார்த்ததில் இகம் தில்லானின் உடல் இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் சீரத்தை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீரத் கவும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அஜித் இந்தர் சிங் மோபாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like