135 பேரின் பார்வைக்கு ஒளியூட்டிய வவுனியா வைத்தியசாலை!

135 பேரின் பார்வைக்கு ஒளியூட்டிய வவுனியா வைத்தியசாலை!

கண்புரை அறுவைசிகிச்சைக்காக காத்திருந்த 135 நோயாளர்களிற்கு இருநாட்களில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கந்தசாமி செந்தூர்பதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்துதெரிவித்த அவர் வவுனியாவில் நூற்றுகணக்கான நோயாளர்கள் கண்சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் கண்புரை நீக்குதல் அறுவைசிகிச்சைக்காக பரிந்துரைசெய்யபட்டு காத்திருப்போரின் பட்டியல் நீண்ட எண்ணிக்கை உடையதாக காணப்படுகின்றது. எனவே அவர்களின் எண்ணிக்கையை குறைத்து அவர்களிற்கான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளும் செயற்திட்டம் ஒன்று கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றது. இரு தினங்களிலும் 135 நோயாளர்களிற்கு வெற்றிகரமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

குறித்த சிகிச்சையானது சுகாதாரஅமைச்சினால் அனுப்பப்பட்ட கண்சத்திரசிகிச்சைநிபுணர் சம்பாபாணகல தலைமையிலான வைத்தியஅதிகாரிகள் மற்றும் தாதியர்களை கொண்டகுழுவே சத்திரசிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

சத்திரசிகிச்சைக்கான நிதி உதவியை புனர்வாழ்வும், புதுவாழ்வும்(Assist Resettlement Renaissance) என்ற நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சத்திரசிகிச்சை மூலம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்றதாக கூறும் வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர், வசதி வாய்ப்புக்களற்ற ஏழை மக்களிற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக கூறினார்.

அதன் ஆரம்பநிகழ்வு கடந்தவாரம் 1ம்,2ம், திகதிகளில் வவுனியா வைத்தியசாலையில் நடைபெற்றது. நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் க.செந்தூர்பதிராஜா, புனர்வாழ்வும், புதுவாழ்வும் நிறுவனத்தின் முக்கியஸ்தர் சர்வேஸ்வரன், வவுனியாவிற்கான இணைப்பாளரான நல்லையா சிறிஸ்கந்தராயா,கென்றி, மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

குறித்த அறுவைசிகிச்சைக்கான இரண்டாவது முகாம் எதிர்வரும் ஏழாம், எட்டாம் திகதிகளிலும் வவுனியாவில் மீண்டும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like