சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு குளத்தில் குதித்த நபர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அழ்வு விவகாரத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய மாவளையாறு கிராமத்தைச் சேர்ந்த 48வயதுடைய சுப்பிரமணியம் இளவரசன் என்பவரே உயிரிழந்தவராவார்.

மட்டக்களப்பு – கித்துள் கிராமசேவகர் பிவிலுள்ள கல்வாடித்துறை ஆற்றுப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முந்தானையாற்றின் கல்வாடித்துறைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக ஆற்றுமண் ஏற்றுவதற்காக மூன்று உழவு இயந்திரத்தில் சென்ற நபர்களை விசேட அதிரடிப்படையினர் தடுத்து கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.

இதில் மூன்று சாரதிகள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். எனினும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவரை தேடும் பணியில் ஈடுபட்டபோது அவர் ஆற்றிப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like