முல்லைத்தீவு மக்களை குறிவைக்கும் மர்மக்குழு!

முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குழு ஒன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த குழு கடந்த 9ஆம் திகதி குறைந்தது 35 நபர்களுடன் முல்லைத்தீவு நகர்பகுதியில் ஒன்று கூடி நள்ளிரவு கூட்டம் ஒன்றினை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த கூட்டத்தில் இணைந்து கொண்டவர்களை ஊக்குவிப்பதற்கு தேர்வு முறையில் பெறுமதியான பரிசுப் பொருள் ஒன்றும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழு தொழில் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பதனை போலவே ஆரம்ப செயற்பாடுகளை தொடங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

அத்துடன் இவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய கையடக்க தொலைபேசி தொடர்புகளுடன் ஒன்று கூடி செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் இவர்களின் நோக்கம் புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள பொதுமக்களை குறிவைத்து நிதி வசூலிப்பது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் முல்லைத்தீவில் பொதுமக்கள் இயற்கை அனர்த்தம் இறுதி யுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புக்களில் இருந்து இன்னமும் மீளாத நிலையில், இக்குழுவின் இவ்வாறான சுயநல செயற்பாடுகள் பொதுநல சேவையில் ஈடுபடுபவர்களை பாதிப்படைய செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like