நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்!

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்!

நம்மில் பலருக்கு நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும்.

நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்து நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.

ஹெர்னியா

நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக சென்று ஹெர்னியா எனப்படும் நோயை ஏற்படுத்தும்.

இரைப்பை குடல் பாதை பாதிப்பு

நீண்ட நாட்களாக நின்று கொண்டே நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

சிறுநீரக பாதிப்பு

தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்.

ஆர்த்ரிடிஸ்

சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும் என்று கூறப்படுகின்றன.

நரம்புகள் டென்சன்

பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பித்து இதயத் துடிப்பு அதிகமாகும்.

குறிப்பு

தினமும் காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும். இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

தண்ணீரை மெதுவாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும். மேலும் தண்ணீரை அண்ணாந்து குடிப்பதை தவிர்ப்பதும் மிகவும் நல்லது.

You might also like