வவுனியா பேருந்து நிலையத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய இரு இளைஞர்கள்!

வவுனியா பேருந்து நிலையத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய இரு இளைஞர்கள்!

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக சாரதியின் கவனகுறைவினால் எற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர்களின் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்காக சாரதி வேகமாக திருப்பியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

மேலும், அவ்விடத்தில் மோட்டசார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்களை பேருந்து சாரதி கவனத்தில் கொள்ளாமல் பேருந்தை திருப்பியுள்ளார். இந்நிலையில் இளைஞர்கள் பேருந்தின் பின் பகுதியில் மோதுண்டு கீழே வீழ்ந்து படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கீழே விழுந்த இரு இளைஞர்களும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதன் பின்னர் இ.போ.ச சாரதியும் நடத்துனரும் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டியவாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், குறித்த பகுதியில் நடந்து சென்ற வயோதிபர் இச்சம்பவத்தினை நேரடியாக தான் கண்டதாகவும் பேருந்து செலுத்தப்பட்ட விதமே பிழையானது என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இ.போ.ச சாரதியும் நடத்துனரும் குறித்த வயோதிபரை அப்பகுதியில் இருந்து அகன்று செல்லுமாறு வலியுறுத்தியதுடன் பொலிஸார் மூலமாக குறித்த சாட்சியை கலைக்க முயற்சி செய்துள்ளனர்.

மேலும், பொலிஸார் குறித்த பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பேருந்தினையும் சேதத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like