வவுனியாவில் பதற்றம் ! மக்களை அச்சுறுத்திய முதலை

வவுனியாவில் பதற்றம் ! மக்களை அச்சுறுத்திய முதலை

வவுனியா,நெளுக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த 12 அடி நீளமான முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது.

வவுனியா,நெளுக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை வீதியில் பயணித்த போது, 12 அடி நீளமான முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பதற்றமடைந்த மக்கள் முதலையை விரட்ட அவ்விடத்தில் கூடிய போது, முதலையானது வீதியோரத்தில்இருந்த சிறிய பற்றைக்குள் புகுந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இதனையடுத்து ஊர்மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த நெளுக்குளம் பொலிசார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து, முதலையை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து மீட்கப்பட்ட முதலை பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

You might also like