உலகில் முதன் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பை மூலம் பிறந்த குழந்தை!

உலகில் முதன் முறையாக இறந்த பெண்ணின் கர்ப்பப்பை மூலம் பிறந்த குழந்தை!

சர்வதேச அளவில் 10 முதல் 15 சதவிகிதமான பெண்கள் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களில் 500 பேரில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறினால் இப்பிரச்சினை எழுகிறது. அவர்களுக்கு கர்ப்பபை மாற்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தைபெறும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறவிலேயே கர்ப்பப்பை இல்லை. எனவே அவருக்கு வலிப்பு நோயால் இறந்த 45 வயது பெண்ணின் கர்ப்பபை தானமாக பெறப்பட்டு சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

சாவ் பாவ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை வைத்தியர் டேனி இஷ்ஜென் பெர்க் தலைமையிலான குழுவினர் இந்த சத்திரசிகிச்சையை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் செய்தனர். தற்போது அந்தபெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி ஆகிய நாடுகளில் இறந்த பெண்களிடம் இருந்து தானம் பெற்று 10 பேருக்கு இத்தகைய சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தற்போது இப்பெண்ணுக்கு வெற்றிகரமாக குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 2 கிலோ 550 கிராம் எடை உள்ளது.

You might also like