இலங்கையை சேர்ந்த ஐந்து பேர் கைது: இரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நடவடிக்கை

இலங்கையை சேர்ந்த ஐந்து பேர் கைது: இரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நடவடிக்கை

இந்திய கடல் பகுதியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடலோரக் காவல் படையின் கப்பலானது ஆந்திரபிரதேச மாநிலத்தின் கடற்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் ரோஹன், ஆன்டனி, பெரெரா, பெருமாள் ராஜ், சுரேஷ்கமார ஆகிய ஐந்து பேரும் ஒரு மீன்பிடிப் படகுடன் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் அப்போது பிடிபட்டனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

அவர்களைக் அதிரடியாக கைது செய்த கடலோரக் காவல் படையினர், மேல் நடவடிக்கைக்காக சென்னைக்குக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் துறைமுகம் காவல் நிலையத்தில் ஐந்து பேரும் இரவு ஒப்படைக்கப்பட்டனர்.

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த ஐந்து இலங்கை மீனவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

You might also like