கட்டிப்பிடித்து எலும்பை நொறுக்கிய நண்பன்: அதிர்ச்சி சம்பவம்

நண்பர் ஒருவர் தன் சக நண்பர் ஒருவரை கட்டி பிடித்த போது அவரது விலா எலும்பு நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மெடிக்கல் கல்லூரியில் கடந்த 1990 ஆம் ஆண்டு மதுகர் ஹைக்வாட் மற்றும் அமித் பாட்வே ஆகிய இருவரும் மருத்துவ படிப்பை முடித்துள்ளனர்.

இதில் அமித் பாட்வே உடற்பயிற்சி முடித்துவிட்டு அஹமதுநகர் மாவட்டத்தில் தனியாக மையற்சி மையத்தை தொடங்கிவிட்டார். ஹைக்வாட் அவுரங்காபாத்தில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.

அதன் பின்னர் இருவருமே சந்தித்து கொள்ளவில்லை. இந்நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு, ஹைக்வாடேவை சந்திக்க அமித் பாட்வே மருத்துவனைக்கு வந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் சந்திப்பதால், இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். இதில், ஹைக்வாடேவுக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹைக்வாடே கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பரை சந்தித்த மகிழ்ச்சியில் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருப்பதற்குள் உடனே வந்து என்னை கட்டிப்பிடித்துவிட்டார். இதில் எனக்கு மூன்று இடங்களில் விலா எலும்பு நொறிங்கிவிட்டது.

இதனால், தொடர்ந்து 15 நாட்களுக்கு மருத்துமனையில் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

You might also like