வவுனியா நெளுக்குளம் காளிகோவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைப்பு

வவுனியா நெளுக்குளம் காளிகோவில் வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைப்பு

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட நெளுக்குளம் காளிகோவில் வீதி செப்பனிடும் பணிகள் இன்று (09.12.2018) காலை 10.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க வவுனியா தெற்கு பிரதேச சபையின் நெளுக்குளம் வட்டார பிரதேசசபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன்(பாபு) அவர்களின் சிபாரிசின் ஊடாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் 0.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

550 மீற்றர் நீளமான , மிக மோசமான நிலையிலிருந்த நெளுக்குளம் காளி கோவில் வீதி செப்பனிடப்படும் பணியிணை தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் , பிரதேசசபை உறுப்பினர் பூ.சந்திரபத்மன்(பாபு) , கிராம இளைஞர்கள் , பொதுமக்கள் என பலரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

You might also like