வவுனியாவில் உயிர் காக்க கோரிக்கை விடுக்கும் மாணவன்

வவுனியாவில் உயிர் காக்க கோரிக்கை விடுக்கும் மாணவன்

வவுனியா – அண்ணா நகர், பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் செ.சதீஸ்குமார் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் அவரின் உயிரை காப்பாற்ற முடிந்த உதவியை செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வவுனியா மற்றும் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியசாலை தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இதற்கு பதினைந்து இலட்சம் ரூபா பணம் தேவைப்படுகிற நிலையில் சிறுவனின் உயிரை காப்பாற்ற சிறுவனின் பெற்றோர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும், குறித்த சிறுவனுக்கு உதவி செய்ய விரும்புவோர் 0773710581, 0764804588 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் அவரின் வங்கி இலக்கமான (BOC) இலங்கை வங்கி 78499753 இலக்கத்திக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like