பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு.. உதட்டை கடித்து துப்பிய இளைஞன்

மும்பையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தமிட்டு, உதட்டை கடித்து துப்பிய இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சியோன் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மதிய வேளையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை எதிர்நோக்கிய திசையில் ஹோலி பண்டிகை கொண்டாடியதை போன்று, உடல் முழுக்க வண்ணப்பொடிகளை பூசி இளைஞன் ஒருவர் வந்துள்ளார்.

திடீரென்று இப்பெண் அருகே வந்தவுடன், பெண்ணை இழுத்து பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அந்த இளைஞனை தடுத்துள்ளார்.

ஆனால் இளைஞனோ இப்பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தது மட்டுமின்றி, அவரது உதட்டை கடித்து துப்பிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனால் காயமடைந்த அப்பெண் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் அந்த இளைஞன் மது குடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

You might also like