தமிழகத்தில் 18 வயது மகளை 5 ஆண்டுகளாக சீரழித்த தந்தை: திடுக்கிடும் பின்னணி

தமிழகத்தில் 18 வயது மகளை 5 ஆண்டுகளாக சீரழித்த தந்தை: திடுக்கிடும் பின்னணி

தமிழகத்தில் பெற்ற மகளை 5 ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகையை சேர்ந்தவர் காந்தி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்த காந்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.

அவர் மனைவி தான் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

மனைவி வீட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், தனியாக இருக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லையை அளித்து இருக்கிறார். மகளுக்கு இப்போது 18 வயதாகிறது. கடந்த 5 வருடமாகவே இப்படித்தான் மகளை சீரழித்து இருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் மகளை நாசம் செய்துவிட்டு, இதைப்பற்றி அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று மகளை மிரட்டியுள்ளார்.

ஆனால் தந்தையின் தொல்லை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தனது அம்மாவிடம் சென்று 5 வருஷங்களாக நடந்த சம்பவத்தை சொல்லியுள்ளார் மகள்.

இதனால் கடுமையாக அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரை கண்டித்தார்.

ஆனால் காந்தி, மகள், மனைவியை சேர்த்து மிரட்ட ஆரம்பித்தார். தன்னை இவ்வளவு நாள் சீரழித்து, மிரட்டி வந்த தந்தை, இப்போது அம்மாவையும் மிரட்ட தொடங்கி விட்டதால், நேராக மாமல்லபுரம் மகளிர் பொலிசுக்கு சென்று 5 வருடமாக தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்தார். இதையடுத்து பொலிசார் காந்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like