யாழில் ஆவா குழு அட்டகாசம்! பல கோணங்களில் விசாரணை..

யாழில் ஆவா குழு அட்டகாசம்! பல கோணங்களில் விசாரணை..

யாழ். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்பவிருந்த வீட்டு வளாகத்துக்குள் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து அங்கிருந்த உடற்பயிற்சி நிலையத்தை சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

பொலிஸ் நிலையத்தை சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் ஜக் மோட்டோர்ஸ் என்ற இடத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.

அந்த காணியில் தற்போது உடற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆவா குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சுன்னாகம் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like