வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

வவுனியாவில் இன்று (22.03.2017) மதியம் 3.00மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள மஞ்சல் கடவையில் இன்று (22.03.2017) மதியம் 3.00மணியளவில் பாதசாரி ஒருவர் பாதையினை கடக்க முற்பட்டுள்ளார். ஏ9 வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் பாதசாரி கடவைக்கு முன்பாக தரித்து நின்றது. காருக்கு பின்பாக வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிலும் தரித்து நின்றது. பல்சர் ரக மோட்டார் சைக்கிலுக்கு பின்பாக வந்த பிலசர் ரக மோட்டார் சைக்கில் பல்சர் ரக மோட்டார் சைக்கிலிலுடன் மோதியதில் சாரதியின் கட்டுப்பாட்டையிலந்த பல்சர் ரக மோட்டார் சைக்கில் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்ப்படவில்லை

 

You might also like