யாழில் கோவிலுக்குள் வைத்து மது அருந்திய நால்வர் : பொலிஸார் மடக்கி பிடிப்பு

யாழ். தெல்­லிப்­ப­ழை பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் மது அருந்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய 2 சார­தி­கள் உட்­பட 4 பேர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர்கள் தெல்­லிப்­ப­ழை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், தெல்­லிப்­பழை பன்­னா­லை­யில் கோவிலுக்குள் வைத்து மது அருந்­திய போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like