பிரித்தானியாவில் நடிகர் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்: வைரலாகும் புகைப்படம்

பிரித்தானியாவில் நடிகர் விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்: வைரலாகும் புகைப்படம்

சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை பிரித்தானியாவுக்கு சென்று வாங்கியுள்ளார் நடிகர் விஜய்.

சர்வதேசக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.

நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் மெர்சல் திரைப்படத்துக்காகச் சிறந்த நடிகர், சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார் நடிகர் விஜய்.
இதில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை அவர் பெறுவதாக செப்டம்பர் மாதம் அறிவித்தது IARA.

இப்போது இந்த விருதை பிரித்தானியாவுக்கு சென்று பெற்றுள்ளார் நடிகர் விஜய்.

கோட் சூட்டுடன் விருது வாங்கிய விஜய்யை கிளிக் செய்து அந்தப் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளது IARA-வின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம்.

இந்தப் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

You might also like