வவுனியா சாம்பல்தோட்டம் மலைமகள் விளையாட்டுக் கழகத்தின் நீண்டநாள் கனவு நனவாகியது

வவுனியா சாம்பல்தோட்டம் மலைமகள் விளையாட்டுக் கழகத்தின் நீண்டநாள் கனவு நனவாகியது

சாம்பல்தோட்டம், மலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தர மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (12.12.2018) மதியம் 2.30 மணியளவில் தமிழரசு கட்சியில் இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் தலமையில் நடைபெற்றது.

தமிழரசு கட்சியில் இளைஞர் அணித்தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களினதும் நெளுக்குளம் வட்டார தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் இரா.அபிசனினதும் வேண்டுகோளுக்கிணங்கவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சின் ஊடாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசிய கூட்டமைப்பின்) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இருதயநாதன் சாள்ஸ் நிர்மலநாதன்அவர்களின் 1 மில்லியன் ரூபாய் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து வவுனியா, சாம்பல்தோட்டம், மலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கு நிரந்தர மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இவ் மண்டபத்திற்காக அடிக்கல் நாட்டும் வைபவத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சந்திரபத்மன் , பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் சிவசுப்பிரமணியம், இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் , கிராம இளைஞர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like