யாழில் புகையிரதத்துடன் மோதிய முச்சக்கரவண்டி

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற கடுகதி புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் சாரதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

நாவற்குழி தச்சன்தோப்பு புகையிரத கடவையை குறித்த முச்சக்கரவண்டி கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்ததுடன், அதிஷ்டவசமாக சாரதி உயிர் தப்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like