வெடிக்கும் நிலையில் உள்ள ஆயுதங்களால் அச்சத்தின் மத்தியில் முல்லைத்தீவு மக்கள்

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்திய கொள்கலன்கள் இன்னமும் அங்கிருந்து அகற்றப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் இருந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பின் காணியின் ஒரு பகுதி கடந்த 4ஆம் திகதி, விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதியில் இருந்த இராணுவத்தினரின் ஆயுதக்களஞ்சியங்கள் அகற்றப்பட்ட போதும், ஆயுதங்கள் களஞ்சியப்படுத்திய கொள்கலன்கள் இன்னமும் அங்கிருந்து அகற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் தமது காணிகளை சுதந்திரமாக பயன்படுத்த முடியவில்லை என காணிகளின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த ஆயுத களஞ்சிய கொள்கலன்களுக்குள் வெடிக்கும் நிலையிலுள்ள பொருட்கள் இருக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

You might also like