யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை : 12 பேருக்கு 1 இலட்சத்து மேல் அபராதம்

யாழ் தென்மராட்சியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 12 பேருக்கு 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபாரிகள் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தவர்கள் யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் திடீர் சுற்றிவளைப்பில் இவர்கள் இனம்காண்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இனம்காணப்பட்ட 12 வியாபாரிகளுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்குகள் விசாரணைக்கு இன்றைய தினம் நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 9 வர்த்தகர்களில் எட்டுப் பேருக்கு தலா 9 ஆயிரம் ரூபா மற்றும் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா அபராதமும்,

நாட்டரிசியினை கிலோ 100 ரூபாவுக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like