பாலியல் தொழில் செய்து சிக்கிய பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு நடந்த திருமணம்: வைரல் புகைப்படங்கள்

பாலியல் தொழில் செய்து சிக்கிய பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு நடந்த திருமணம்: வைரல் புகைப்படங்கள்

பிரபல நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோகில் மிட்டலை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் ரா ரா, சந்தமாமா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு.

இவர் தெலுங்கு படங்களிலும் நடித்த நிலையில் சரியான வாய்ப்பு இல்லாததால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் கடந்த 2014-ல் தெலுங்கானாவில் உள்ள பஞ்சார ஹில்ஸ் பகுதி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார்.

15 நாள் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஸ்வேதா பாசுவின் நிலை அறிந்த ஹிந்தி இயக்குனர் ஏக்தா கபூர் தான் தயாரித்த சந்திரநந்தினி தொடரில் ஹீரோயின் ஆக்கினார். இந்த தொடர் தமிழிலும் ஒளிபரப்பானது.

இந்த தொடரில் நடித்தபோது ஸ்வேதா பாசுக்கும் துணை இயக்குனர் ரோகில் மிட்டலுக்கும் காதல் மலர்ந்தது. சில ஆண்டுகள் காதலித்த இவர்கள், நேற்று மும்பையில் திருமணம் செய்து கொண்டனர்.

மும்பை நட்சத்திர ஒட்டலில், பெங்காலி முறைப்படி திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

You might also like