சுவாமி அறையில் குவியும் திருநீறு !எங்கிருந்து வருகின்றது என்பது தெரியவில்லை? படையெடுக்கும் மக்கள்!

சுவாமி அறையில் குவியும் திருநீறு !எங்கிருந்து வருகின்றது என்பது தெரியவில்லை? படையெடுக்கும் மக்கள்!

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி தமிழ் கிராமத்திலுள்ள வீடொன்றில்

சுவாமி அறையில் திருநீறு வெளிவருகின்றது. எங்கிருந்து வருகின்றது ??? காணும் அவாவுடன் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் இந்துக்களின் ஆலயம் வீட்டில் நடைபெறும் பல நிகழ்வுகளை கண்டுள்ளோம்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இவ்வாறன காலத்தில் அதிசயமான அற்புதமான நிகழ்வொன்று தற்போது நடைபெற்றுள்ளது,

அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டிக் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமி படங்களிலிருந்து விபூதி சொரிந்துவருகிறது.

கடந்த ஒரு வாரகாலமாக இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுவருதாக தெரிவித்துள்ளனர்.

காளிஅம்பாளுக்கு பூசை செய்யும் அடியாரான 56வயதான கந்தசாமி விஜயராசா என்பவரின் வீட்டிலுள்ள சுவாமி படங்களில் இவ்விபூதி வெளிவந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக முன்பெல்லாம் சத்தியசாயி பாவா படத்திலிருந்துதான் விபூதி மற்றும் குங்குமம் வெளிவந்த அதிசயம் இடம்பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இங்கு அனைத்து சுவாமி படங்களிலுமிருந்து விபூதி சொரியப்பட்டுவருதாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தைக் கேள்வியுற்ற மக்கள் அங்குசென்று பார்வையிட்டு வணங்கிவருகின்றனர். காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட குழுவினரும் சென்று பார்வையிட்டனர். நேற்று சமயபிரமுகர் காந்தன் தலைமையில் சாயிபஜனையும் அங்கு இடம்பெற்றது.

You might also like