அதிக பொருட்செலவில் நடந்த பிரபலங்களின் திருமணங்கள்

அதிக பொருட்செலவில் நடந்த பிரபலங்களின் திருமணங்கள்

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக பெரும் பொருட்செலவில் நடந்து முடிந்தது.

இதேபோல் ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் குறித்து இங்கு காண்போம்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

ஷாருக்கான்-கௌரி

பிரபல நடிகர் ஷாருக்கான் கடந்த 1991ஆம் ஆண்டு கௌரியை திருமணம் செய்துகொண்டார். அன்றைய காலகட்டத்தில் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மிகுந்த பொருட்செலவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக ஆன செலவு ஒரு கோடி என்று கூறப்படுகிறது.

அமீர்கான்-கிரண்

பிரபல நடிகர் அமீர்கான் தன்னிடம் லகான் படத்தில் உதவியாளராக பணியாற்றிய கிரணை திருமணம் செய்தார். இது அமீர்கானுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். எனவே, ஆடம்பரமாக இந்த திருமணம் நடைபெறவில்லை. இருந்தாலும் இவர்களின் திருமண செலவு இரண்டு கோடிகளை தாண்டியதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன்

பாலிவுட் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த திருமணம் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சனுடைய திருமணம் தான். காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. இவர்களின் திருமணத்திற்கு 6 கோடிக்கும் மேல் செலவானதாக கூறப்படுகிறது.

ஹிருத்திக் ரோஷன்-சூசன்

பல பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வரும் ஹிருத்திக் ரோஷன், தனது தோழியும் காதலியுமான சூசனை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களின் திருமணத்திற்கான செலவு 3 கோடிகளை தாண்டியதாக கூறப்படுகிறது.

அக்‌ஷய்குமார்-டிவிங்கிள்

நடிகர் அக்‌ஷய்குமாரும், டிவிங்கிள் கண்ணாவும் காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண விழாவிற்கான செலவு 3.5 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.

ஷில்பா ஷெட்டி-ராஜ்

நடிகை ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை, கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு ஆன செலவு 4 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.

ஜெனிலியா-ரித்தேஷ்

தமிழில் சில படங்களில் நடித்த ஜெனிலியா, ஹிந்தி நடிகர் ரித்தேஷை காதலித்து வந்தார். பின்னர் இந்த ஜோடி இந்து முறைப்படியும், கிறித்துவ முறைப்படியும் திருமணம் செய்துகொண்டது. இந்த திருமணத்திற்கு ஆன செலவு 5.5 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.

சையீப் அலிகான்-கரீனா கபூர்

நடிகர் சையீப் அலிகானுக்கு 2வது திருமணம் என்றாலும், நடிகை கரீனா கபூரை பிரம்மாண்டனமான முறையில் திருமணம் செய்துகொண்டார். ராயல் திருமணமாக நடந்ததாலும், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த திருமணத்திற்கு ஆன மொத்த செலவு 10 கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆர்-லட்சுமி

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-லட்சுமியின் திருமணத்திற்கான கல்யாண மண்டபம் செட் போட்டு நடந்தது. இதனை கலை இயக்குநர் ஆனந்த் சாய் அமைத்திருந்தார்.

நிஜமாகவே ஒரு திரைப்படத்தைப் போன்றே இந்த திருமணம் நடந்தது. 18 கோடிகளை தாண்டி இந்த திருமணத்திற்கு செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

லட்சுமி மிட்டல் இல்லத் திருமணம்

பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா-அமித் பாட்டியாவின் திருமணம், கடந்த 2004ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு 350 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

சஹார குடும்ப திருமணம்

கடந்த 2004ஆம் ஆண்டு சஹாரா நிறுவனர் சுப்ரதா ராய், தனது மகன்களுக்கு 552 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் லக்னோவில் உள்ள சஹாரா விலேஜ்ஜில் நடைபெற்றது. உலகளவில் பெரும் பிரபலங்கள், தொழிலதிபர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

அம்பானி குடும்ப திருமணம்

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகளின் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தது. இந்தியாவின் பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

இந்த திருமணத்திற்காக 700 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

You might also like