மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்.. பின்னர் செய்த அதிர்ச்சி செயல்

மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்.. பின்னர் செய்த அதிர்ச்சி செயல்

தமிழகத்தில் கழுத்தை நெரித்து மகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் ராஜாகனி- ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தம்பதியினர். இவர்களின் மகள் அபிநயா பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், அபிநயா அப்பகுதியில் உள்ள ஒரு வாலிபருடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது தாய் ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி தனது மகள் அபிநயாவை கண்டித்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

அப்போது தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் அதிகரித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அபிநயாவின் கழுத்தை ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி நெரித்ததாகவும் அதில் அபிநயா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பதட்டமும் மனவேதனையும் அடைந்த ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி வீட்டினுள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் பற்றி தகவலறிந்த பொலிசார் ரோஸ்ஜெப ஜென்ஸிமேரி வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் தாய், மகள் இருவரது சடலங்களும் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விசாரணையில் அவரது கணவர் ராஜாகனி மற்றும் உறவினர்கள் ரகசியமாக இருவரது உடல்களையும் புதைக்க திட்டமிட்டது தெரிய வந்தது.

இருவரது சடலங்களையும் ராஜாக்கனியின் சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்குக் எடுத்துச் சென்றது தெரிந்தது.

இதைனையடுத்து விரைந்து சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் கணவர் ராஜாகனியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like